சென்னை:

ழை மாணவ மாணவிகளுக்கு இரவு உணவு வழங்கி, மாணவர்களின் இடைநிற்றலை தடுத்தும், பசியும் வாழும் மாணவ மாணவிக்கு உதவி செய்து அசத்தி  வருகிறது சென்னை சவுகார்பேட்டை பகுதியில் உள்ள  சென்னை முன்னேற்றக் கழக மேல்நிலைப்பள்ளி.

135 ஆண்டுகள் கடந்த பழமையான பள்ளிக்கூடம் ஒன்று மாணவர்களின் பசியைப் போக்கி, மாணவர்களை தொடர்ந்து படிக்க வைக்கும் எண்ணத்தில், இரவுநேர உணவு வழங்கி வருகிறது. இது பாரிமுனை பகுதி ஏழை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை சவுகார்பேட்டை பகுதியில் செயல்பட்டு வருகிறது சென்னை முன்னேற்றக் கழக மேல்நிலைப்பள்ளி (Madras Progressive Union Higher Secondary School) 135 ஆண்டுகளை கடந்த இந்த  பழமையான பள்ளியில் தற்போது 275 மாணவ மாணவிகள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.

பிராட்வே, சவுகார்பேட்டை, பெரியமேடு, பாரிமுனை, மின்ட், மண்ணடி பகுதிகளைச் சேர்ந்த ஏழ்மை யான குடும்பத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றன. இங்கு படிக்கும் ஏழை மாணவ மாணவிகளின் பசியைப் போக்கும் வகையில், மதிய உணவுத் திட்டத்தின்படி சத்துணவு வழங்கப்பட்டு வருவதுடன், வாரத்தின் 5 நாட்களிலும்,  மாலை நேரத்திலும் இரவு உணவு வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்வு மற்ற பள்ளிகளை விட முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. பள்ளியில் இந்த செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தங்களின் செயல், மாணவ மாணவிகளின் இடை நிற்றல் எண்ணிக்கையைக் குறைக்கவும் கல்வி செயல்திறனை மேம்படுத்தவும் உதவியது என்று பள்ளியின் முதல்வர் நிர்மலா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறியவர், இங்கு படிக்கும் பெரும்பாலான ஏழை மாணவ மாணவிகள், தங்கள் வீடுகளில் பள்ளி வேலைகளைச் செய்வதற்கான அடிப்படை உள்கட்டமைப்பு இல்லை, அவர்களின் பெற்றோர் தினக்கூலி வேலை செய்து வருகிறார்காளர். சிலர் வீடற்றவர்கள், கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் குடும்பங்களில் முதல் முறையாக பள்ளிக்குச் செல்வோர். எனவே இரவு 8 மணி வரை இங்கேயே தங்கி படிக்கும் வகையிலும், அப்படி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு  பள்ளி சார்பில் உணவு வழங்கி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், ஏழை குடும்பங்களைச்சேர்ந்த  இவர்கள் பெரும்பாலும் மதிய உணவு மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருபவர்கள், பலர் தொடர்ந்து படிக்க முடியாமல் வேலைக்கு சென்று விடுவார்கள். இதனால் கல்வியை இடையில் நிறுத்தி விடுகிறார்கள். இதை கவனித்த நாங்கள், அவர்களின் பசியைப் போக்கி, கல்வியைத் தொடர விரும்பினோம். இதன் காரணமாகவே  மாலை உணவை வழங்க நாங்கள் முடிவு செய்தோம் என்று கூறினார்.

தங்களின் இந்த செயல் பயன் அளித்ததாக கூறும் முதல்வர் நிர்மலா,  தினசரி கூலிகள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு பெறுவது போராட்டமான வாழ்க்கை, அவர்களின் குழந்தைகள் படிப்பைத் தொடர நாங்கள் உதவி வருகிறோம் என்று கூறுபவர், இரவு 8 மணி வரை பள்ளியிலேயே தங்கி படிக்கும் வகையிலும், அவர்களுக்கு பள்ளி சார்பில் இரவு உணவும் வழங்கி வருகிறோம்,” என்றும்,  “அதிர்ஷ்டவசமாக, மாணவ மாணவிகளுக்கு உணவு அளிக்கும் வகையில்  , எங்களுக்கு  போதுமான உணவு கிடைக்கிறது,” என்று என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.

தங்களின் இந்த செய்ல காரணமாக,  “இப்போது அவர்கள் இரண்டு நேரம்  உணவைப் பெறுகிறார்கள், இதனால், மாணவர்கள் கல்வியில் அதிக ஆற்றல் மற்றும் சிறந்த கவனம் செலுத்துகிறார்கள். மாணவ மாணவிகள் யாரும் பசியோடு இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம், என்றார் நிர்மலா.