துரை

நேற்று நடந்த 12 ஆம் வகுப்பு கணித வினாத்தாள் மிகவும் கடுமையாக இருந்ததால் மதுரை மாணவர்கள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர்.

தற்போது தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மாநிலம் எங்கும் நடந்து வருகின்றன.   நேற்று இந்த தேர்வில் கணிதம், மிருகவியல், காமர்ஸ், மைக்ரோ பயாலஜி, உணவுத் துறை, உள்ளிட்ட பல தேர்வுகள் நடந்தன.   இவற்றில் கணித தேர்வை மதுரை மாநகரில் மட்டும் சுமார் 18250 பேர் எழுதினார்கள்.   அடுத்தபடியாக காமற்ச் தேர்வை 13,083 பேர் எழுதினார்கள்

நேற்று கணித தேர்வை எழுதிய மதுரை மாணவர்கள் இந்த தேர்வின் வினாத்தாள் மிகவும் கடினமாக் அமைந்துள்ளதாக கூறி உள்ளனர்.  ஒரு சில மாணவர்கள் இந்த வினாத்தாளினால் தாங்கள் தேர்ச்சி பெறுவதே கடினம் என கலக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.   குறிப்பாக இரு மதிப்பெண்கள் மற்றும் மூன்று மதிப்பெண்கள் பிரிவில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.

தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர் லோகேஸ்வரன், “தேர்வுக்கு முன்பு ஒரு மதிப்பெண் பிரிவில் உள்ள கேள்விகள் கடினமாக இருக்கும் என கூறப்பட்டது.   ஏனென்றால் இந்த பிரிவில் அனைத்து கேள்விகளும் பொருத்துக என்னும் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் என கூறப்பட்டது.

ஆனால் கேள்வித்தாளில் ஒரு மதிப்பெண் பிரிவில் உள்ள கேள்விகள் மிகவும் சுலபமாக இருந்தன.   அந்த பிரிவில் பொருத்துக என கேட்கப்படவில்லை

அதற்கு பதிலாக இரண்டு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் பிரிவில் இத்தகைய கேள்விகள் கேட்கப்பட்டன.   இவைகளில் பல கேள்விகள் பாடப்புத்தகத்தில் இல்லாதவைகள் ஆகும்” என கவலையுடன் தெரிவித்தார்.