மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அரசுக்கு உயர்நீதி மன்றம் சரமாரியாக கேள்வி

மதுரை:

துரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா, பணிகள் எப்போது தொடங்கும் என மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்று ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்தது.  இதுகுறித்து தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. தற்போது அதன் நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மதுரையில் எய்ம்ஸ் அடைய உள்ள இடத்தை மாநில அமைச்சர்கள் ஆய்வு செய்தபோது…

இந்த நிலையில், ரமேஷ் என்பவர் உயர்நிதி மன்றம் மதுரை கிளையில்,  எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி வழக்கு தொடர்ந்தார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், மத்திய அறிவித்தபடி, பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், மதுரை தோப்பூரில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் மதுரை மாவட்டம், தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும்.

மேலும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.  விசாரணையின்போது நீதிபதிகள் மத்திய மாநில அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?

பணி துவங்க எவ்வளவு நாட்கள் ஆகும் ?

பணி முடிவடைவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் ?

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 6-ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Madurai Aiims Hospital: The High Court Madurai branch questioned to central government, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடும் இல்லை
-=-