அதீத லஞ்சம் : மதுரை ஏர்போர்ட்டில் டிவியை உடைத்த பயணி!

மதுரை மைந்தன்  அவர்களின் முகநூல் பதிவு:

1

துபாயில்  கூலி வேலை பார்த்துவரும் நம் சகோதரர் ஒருவர், சொந்த ஊருக்கு திரும்பினார்.  நல்ல கம்பேனி டிவி  வாங்க பணம் இல்லாமல் வெறும் கையோடு வரக்கூடாது என்று சைனா டிவி (  China Elekta 250 Dubai money) ஒன்றை  வாங்கிக்கொண்டு ஊருக்கு வந்தார்.அந்த டிவியின் மதிப்ப   நம் ஊர் மதிப்பு  5000  ரூபாய்.

மதுரை ஏர்போர்ட்டில்  டி.வியுடன் இறங்கிய  நம் சகோதரிடம்,  மதுரை ஏர்போர்ட்டில் பணி புரியும்   பணம் திண்ணி அதிகாரி,   டிவியை எடுத்துச் செல்ல வேண்டுமானால்  ரூபாய் 7000 ஆயிரம்  லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

2

நம் சகோதரரோ,  ” டி.வியின் மதிப்பே 5000 ரூபாய்தான். என்னிடம் பணமும் இல்லை” என்று சொல்லி பார்த்திருக்கிறார்.  அந்த லஞ்ச அதிகாரி கேட்பதாய் இல்லை. நமது சகோதரர்,  அழுது புலம்பி கெஞ்சி கதறி காழில்விழாத குறையாக 2000 அல்லது 3000 வரை தருவதாக  போரடிப்பார்த்தார்.

அந்த அதிகாரி மசியவே இல்லை. ” ரூபாய் 7000 கொடு இல்லை என்றால் விட்டுவிட்டு ஓடு” என்றார்.

3

இவரோ பணம் இல்லாமல் உனக்கு இந்த டிவியை   தந்துவிட்டு போவதற்கு இங்கேயே உடைத்துவிட்டு போகிறேன் என்று உடைத்து எறிந்துவிட்டு வந்துவிட்டார்.

வெளிநாட்டில் கூலி வேலை பார்த்து சம்பாதிப்போரின் வலியை இந்த அதிகாரிகள் என்றுதான் உணர்வார்களோ!

 

கார்ட்டூன் கேலரி