மதுரை விமானநிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்ககோரி நடுவானில் விமானத்தினுள் கோஷம்…. 8 பேர் கைது

மதுரை:

துரையில் செயல்பட்டு வரும்  விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி தேவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இன்று சென்னையில்  மதுரைக்க  இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த சிலர், விமானம்  நடுவானில் பறந்தபோது, மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் வைக்க கோரி கோஷமிட்டனர். இதன் காரணமாக விமானத்தினுள் பதட்டம் ஏற்பட்டது.

வழக்கம்போல  சென்னையில் இருந்து இன்று மதியம்  12.55 மணிக்கு ஏர் இன்டிகோ விமானம் மதுரைக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில்,பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் முருகன் தலைமையில் 8 பேர் பயணம் செய்தனர்.

இவர்கள் பயணம் செய்த விமானம் திருச்சியை தாண்டி மதுரைக்கு சென்றபோது, நடுவானில் விமானத்தில் எழுந்துநின்று கோஷமிட்டனர். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக் கோரி முழக்கமிட்டனர். இதனால் சக பயணிகளும், விமான ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக மதுரை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விமானமும் மதுரை விமானநிலையத்தில் தரையிறங்கியது. அதைத் தொடர்ந்து விமானத்தினுள் கோஷமிட்டவர்களை  காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.