‘காப்பான்’ தமிழ்நாடு வினியோக உரிமையை மதுரை அன்பு வாங்குகிறாரா…?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’

செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை பிரபல வினியோகஸ்தர் மதுரை அன்பு வாங்குவதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் தவிர ஆந்திரா, தெலங்கானாவிலும் இப்படத்தின் வசூல் நன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.