Random image

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகளில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக ராஜநாகுலு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் கோவில் சன்னிதி அருகே உள்ள 51 கடைகளை மட்டும் திறந்து கொள்ள இன்று அனுமதி வழங்கியது. மேலும் டிசம்பர் 31-ம் தேதி வரை கடைகளை நடத்திக் கொள்வது குறித்து உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும். வாடகை பாக்கியை முறையாக கோவில் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.