சென்னை:

மிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 18ந்தேதி, பிரபலமான மதுரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தலை தள்ளி வைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

ஏப்ரல் 18ந்தேதி, மதுரை சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் பண்டிக்கைகள் வருவதால், அன்றைய தினம் அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால்,அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்த நிலையில், இதுதொடர்பாக வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதிகள்,  மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மதுரை சித்திரை திருவிழாவுக்காக வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்திருப்பதாகவும், கிறிஸ்த்துவ பள்ளிகளில் உள்ள தேவலாயங்களுக்கு பிராத்தனைக்கு சுதந்திரமாக சென்று வர ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதை  மாற்ற முடியாது என்றும், வாக்குச்சாவடிகளை யும்  மாற்ற இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.  வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்குகளின் தீர்ப்பை நாளை வழங்குவதாகக் கூறி  ஒத்தி வைத்தனர்.