மதுரை:

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும்  17-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதையொட்டி தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ந்தேதி  தேரோட்டம் நடைபெறுகிறது.

மதுரை சித்திரை தேரோட்டத்தை தொடர்ந்து தேர்தலை தள்ளி வைக்கக்கோரி பல முறை முறை யிட்டும் தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளி வைக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்த படி மீதுரை மீனாட்சியின் சித்திரை திருவிழாவில் சிறப்பாக நடைபெறும் வகையில் இன்று காலை  10.05 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தகர்கள் கொடியேற்ற விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.  ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

15-ம் தேதி:  இரவு 8 மணிக்கு மேல் 8.24-க்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். ‘

16-ம் தேதி   திக்கு விஜயம் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

17-ம் தேதி : காலை 9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்குள் மிதுன லக்னத்தில் நடைபெறுகிறது.

18-ம் தேதி:  காலை 5.45 மணிக்கு தேரோட்டம் ஆரம்பம்…

19-ம் தேதி : தீர்த்தம் மற்றும் தேவேந்திரர் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக கட்டணமில்லா தரிசன முறையில் 3,200 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் ரூ.200, ரூ.500 கட்டணத்தில் கோயில் இணையதளம் மூலம் இன்று (ஏப்.8) முதல் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் செய்து வருகின்றனர்.

திருவிழாவின்போதே மக்களவைத் தேர்தலும் நடைபெறுவதால் காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக 2 ஐ.ஜி.க்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.