மதுரையில் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று: 57 பேர் பலி

மதுரை: மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4000 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.

கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கையாக மதுரையில் வரும் 12ம் தேதி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 3,776 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந் நிலையில் மேலும் 315 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,091 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 994 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 57 பேர் பலியாகி இருக்கின்றனர்.