ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து

மதுரை:
துரையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது.

மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றின் குடோனில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த தீபாவளியன்று அதே பகுதியில் உள்ள மற்றொரு ஜவுளிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு வீரர்கள் கட்டடம் இடிந்து இடிப்பாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்தனர்.

தற்போது ஏற்பட்டுள்ள தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து சேதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே வாரத்தில் இரு ஜவுளிக்கடைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

You may have missed