மதுரை:

மிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் படிப்படியாக மூட வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது கிரானைட் குவாரி களையு மூடவும் உத்தரவிட்டு உள்ளது.

மதுரை  மேலூர் அருகே சட்டவிரோதமாக ஏராளமான ஏக்கரில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்த தால், தமிழக அரசுக்கு 1 லட்ரூசத்து.16 ஆயிரம்  கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று  கடந்த 20‌15-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்‌தில் ஐஏஎஸ் அ‌‌திகாரி சகாயம் தலைமையிலான குழு தனது அறி‌க்கையை தாக்கல் செய்தது. இது தொடர்பான ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளை கிரானைட் குவாரிகளை மூட அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஜல்லிக்காக மட்டுமே குவாரிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், ஜல்லிக்காக மட்டுமே குவாரிகள் பயன்படுத்தப்படு கின்றன என்பதை உறுதிபடுத்த வேண்டும். இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஐகோர்ட்டு கிளையின் அதிரடி உத்தரவுக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.