ஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், ல்லூரி மாணவி அகிலாண்டேஸ்வரி என்பவரை,  பண மோசடி செய்ததாக பொய் வழக்கு போட்டு,  விசாரணைக்கு அழைத்து வந்தார்

அந்த இளம்பெண்ணை, சட்டத்துக்கு முரணாக டெம்பிள் டவர் என்ற சொகுசு ஓட்டலில் தங்கவைத்தார். அங்கு வைத்து அந்த பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் டார்ச்சர் கொடுத்தார்.

அந்த பெண், ஓட்டலிலேயே மர்மமான முறையில் மரணமடைந்தார். தற்கொலை என்றது காவல்துறை.

அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு, தற்கொலையாக ஜோடித்துவிட்டார் சேதுமணிமாதவன் என்று அப்போது பேசப்பட்டது.  அந்த பெண்ணின் பெற்றோரும் இதைத்தான் சொன்னார்கள்.

அவர்களின் சட்டப்போராட்டம் காரணமாக, விசாரணை துவங்கி, சேதுமணிமாதவன் கைது செய்யப்பட்டார். ஆனால் வழக்கில் இருந்து விடுதலை ஆனார்.

அதன் பிறகு, மீண்டும் காவல் அதிகாரியாக சேர்ந்தார்.

மறுபடியும் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தின் படி ஏறினர். அவர்களுக்கு இடதுசாரி இயக்கத்தினரும் துணை நின்றனர்.  வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடந்தது. வழக்கு நடந்தது.

இன்று சேதுமணிமாதவனுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

தற்போது மதுரையில் பணியாற்றி வருகிறார் சேதுமணிமாதவன். இந்தத் தீர்ப்பை அறிந்த மதுரை மக்கள், வெடி வெடிக்காத குறையாய் கொண்டாடுகிறார்கள்.

அத்தனை அட்டூழியம், சட்டமீறல்கள்.

சமீபத்தில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது,  இயக்குநர் வ.கவுதமன் உட்பட பல மாணவர்களை கொடூரமாகத் தாக்கியவர் இந்த சேதுமணிமாதவன்தான்

எப்படியோ இறுதியில் சேதுமணிமாதவனுக்கு தண்டனை கிடைத்துவிட்டது என்று பெருமூச்சு விடமுடியாது.

இடைப்பட்ட காலத்தில், பல ஊர்களில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவிட்டார் சேதுமணிமாதவன்.

இதை இப்படியும் சொல்லலாம்…

பாலியல் கொலைக் குற்றவாளியான ஒருவர், பல வருடங்களாக போலீஸ் இன்ஸ்பெக்டராய் அதிகாரத்தோடு வலம் வந்திருக்கிறார்.

சட்டம்!