சென்னை:

துவிலக்குக்கு எதிராக போராடி வரும் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, இன்று மெரினாவில் போராட்டம் நடத்த முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மாணவி நந்தினி மதுக்கடைகளை தமிழகம் முழுவதும் கொண்டுவந்த ஜெயலலிதாவுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியவர். ஜெ.வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்தபோதும்  கைது செய்யப்பட்டார்.

மேலும் தமிழகம் முழுவதும் சென்று ஆங்கே நடைபெறும் சமூகவிரோத பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.  சமீபத்தில் ஆரணி பகுதியில் நடைபெற்ற குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

கடந்த ஆண்டு பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை கேட்டு போராட்டம் நடத்தினார். அதுபோல தமிழக அரசை மறைமுகமாக இயக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட சென்றபோதும் கைது செய்யப்பட்டார்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையை கண்டித்த ஒரு குடும்பதே தீக்குளித்து இறந்ததற்கு நியாயம் கோரி அங்கு போராட்டம் நடத்தியபோதும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று மெரினாவில் மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டும் விழா இ நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மெரினா கடற்கரையில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நந்தினி போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அவரை அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதன் காரணமாக மெரினா கடற்கரையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.