மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீண்டும் கடைகள் திறப்பு

துரை

யர்நீதிமன்றக் கிளை உத்தரவின் பேரில் நேற்று மீண்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் கடைகள் திறக்கப்பட்டன.

 

கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர வாசலில் ஏற்பட்ட தீவிபத்தில் 19 கடைகள் எரிந்து சாம்பல் அகிய்ன.   அத்துடன் வீரவசந்தராயர் மண்டபம் முழுவதும் சேதமாகியது.   இதனால் கோவிலில் உள்ள கடைகள் அனைத்தையும் மூட அறநிலையத் துறையினரால் உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிருத்து கடை உரிமையாளர் சங்கம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஹ்டாக்கல் செய்யப்பட்டது.   வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை அம்மன் சன்னிதி பகுதியில் வரும் டிசம்பர் மாதம் 31 வரை நடத்த அனுமதி வழங்கியது.   இதற்கு  சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

இந்த உத்தரவையொட்டி நேற்று முன் தினம் மீண்டும் கடைகளை திறக்க கடை உரிமையாளர்கள் கோவில் இணை ஆணையரிடம் மனு அளித்தனர்.   கடைக்கார்கள் தர வேண்டிய பாக்கித் தொகையை செலுத்தி விட்டு கடைகளை திறக்க் அவர் அனுமதி அளித்தார்.    அதன்படி கடை உரிமையாளர்கள் பாக்கி தொகையை அளித்து விட்டு நேற்று மீண்டும் கடைகளை திறந்துள்ளனர்.