மதுரை:

துரை மீனாட்சியம்மன் கோவில் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  கோயிலில் பணியாற்றும் தீயணைப்பு படை வீரர் ஒருவர் உள்பட அக்கோயில் ஊழியர்கள் மேலும் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம்  மீனாட்சி அம்மன் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் ஒருவரின் தாயார் கொரோனா வால் உயிரிழந்த நிலையில், கோவிலில் பணியாற்றிய அனைவரும் கொரோனோ சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனை முடிவில், கோயிலில் பணிபுரியும் எலெக்ட்ரிசியன், கணினி உதவியாளர், தீயணைப்பு படை வீரர் ஒருவர் என மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து,  மதுரை மேல சித்திரை வீதியில் உள்ள தீயணைப்பு நிலையம் மூடப்பட்டது. அங்குள்ள வீரர்கள் அனைவருக்கும் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் இன்று கரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 26) மட்டும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.