மதுரை:

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை 9 மணிக்குமேல் 9.30 மணிக்குள்ளாக விமரிசையாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், பக்தி பெருக்குடன் இன்று காலை வெகு விமரிசையாக மீனாட்சி சுந்தரேசுவர் திருமணம் மங்கள வாத்தியங்கள் முழங்க நடைடெபற்றது.

 

மதுரை சித்திரைத் திருவிழா  கடந்த 18-ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன்  தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம்  கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றது.

நேற்றைய விழாவின்போது, மரவர்ணச் சப்பரத்தில் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள சிவகங்கைராஜா மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.

அதைத்தொடர்ந்து, நேற்று மாலை சுவாமி பிரியாவிடையுடனும், தனியாக அம்மனும் இந்திர விமானத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வடக்கு- கீழமாசி வீதி சந்திப்பில் உள்ள லாலாஸ்ரீ ரெங்க சத்திரம் மண்டகப்படிமுன்பு எழுந்தருளினர். அங்கு திக்விஜயம் பூஜைகள் நடைபெற்றன.

இந்நிலையில் இன்று காலை சுபமுகூர்த்த நேரமான காலை 9.05 மணி முதல் 9.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற்றும் என ஏற்கனவே  சுபமுகூர்த்த பத்திரிகையில் அறிவித்தபோடு, அதற்கான ஏற்பாடுகள் காலை முதலே நடைபெற்று வந்தன.

அதன்படி காலை 9 மணிக்கு மீனாட்சியும், சுந்தரரேசுவரரும் திருமண  மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த னர். தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்றது. சுமார் 9.20 மணி அளவில் சுந்தரேசுவரர் மீனாட்சிக்கு திருநாண் அணிவித்தார்.மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பக்தி கோஷத்துடன்  வெகு விமரிசையாக திருமணம் நடந்தேறியது.

மீனாட்சிக்கு திருநாண் அணிவிக்கும் காட்சி

இன்று மீனாட்சி சுந்ரேசுவரர் திருமணத்தையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. லட்சக் கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர்.

தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை மதுரை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற உள்ளது.