துரை

துரை மத்திய சிறையில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.

மதுரை மத்திய சிறையில் கைதிகளிடம் மொபைல் உல்ளிட்ட பல தடைப்பட்ட பொருட்கள் உள்ளதாக காவல்துறையினருக்குப் புகார்கள் வந்துள்ளன.  அந்த புகாரையொட்டி திலகர் திடல் காவல் நிலைய துணை ஆணையர் வேணுகோபால் தலைமையில் நேற்று காலை  திடீர் சோதனை நடந்துள்ளது.

இந்த சோதனை குழுவில் வேணுகோபால் தலைமையில் இரு காவல்துறை ஆய்வாளர், 7 காவல்துறை உதவி ஆய்வாளர், மற்றும் 80 ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.   இந்த ஆய்வு நேற்று காலை 6 மணிக்குத் தொடங்கி  இரவு 7.45 மணிவரை நடந்துள்ளது.

இந்த சோதனையையொட்டி அனைத்து கைதிகளும் சிறையை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.  பெண்கள் பகுதியில் பெண் காவலர்கள் அடங்கிய தனிக் குழு  சோதனை நடத்தி உள்ளது.   இந்த சோதனையில் 60 சிறைக் காவல் துறையினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்த சோதனையின் போது மொபைல் போன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.