அழகி போட்டி’….மதுரை ரெயில் நிலையம் 2ம் இடம் பிடித்தது.

டில்லி:

இந்திய ரெயில் நிலையங்களை அழகுபடுத்த ரெயில்வே வாரியம் உத்தரவிட்டது. இந்த வகையில் மதுரை கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா உத்தரவின் பேரில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டன.

‘இந்தியாவின் அழகிய ரெயில் நிலையங்கள்’ என்ற தலைப்பில் ரெயில்வே வாரியம் ஆய்வு செய்தது. இதில் மதுரை ரெயில் நிலையம் 2-வது இடம் பிடித்துள்ளது.

இதற்கான பரிசளிப்பு விழா டில்லி ரெயில்வே வாரிய அலுவலகத்தில் நடந்தது. இதில் தலைமை விருந்தினராக ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டு மதுரை ரெயில் நிலையத்தில் ஓவியம் வரைந்த கலைஞர்கள் ரமேஷ், கண்ணன் ஆகியோருக்கு ரூ.5 லட்சம் ரொக்கம், சான்றிதழ் வழங்கினார்.