மதுரை சரவணன் வீடியோ விவகாரம்: சட்டசபையில் அமளி

சென்னை,

மிழக சட்டசபையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தில் முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் குறித்த, கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.

அதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். அப்போது, இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தற்போது அதுகுறித்து விவாதிக்க முடியாது என்று கூறினார்.

இதன் காரணமாக திமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சபை கூச்சல் குழப்பமாக உள்ளது.

மதுரை எம்எல்ஏ சரவணன், கூவத்தூரில் சசிகலா அணிக்கு ஆதரவாக பண பேரம் நடத்தப்பட்ட தாக கூறியதாக வெளியாக வீடியோ கடந்த இரண்டு நாட்களுக்கு ஆங்கில தொலைக்காட்சியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.