சென்னை:

டப்பாடி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு பண பேரம் நடத்தப்பட்டது குறித்த வீடியோ ஆங்கில தொலைக்காட்சி சேனலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க திமுக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்தது. அதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்ததை தொடர்ந்து திமுக வெளிநடப்பு செய்தது.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபை இரண்டாவது நாளான இன்று கேள்வி நேரத்துடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. எம்எல்ஏக்கள் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

கேள்வி நேரம் முடிந்த உடன் நேரமில்லா நேரத்தில் மு.க.ஸ்டாலின்  எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் தொடர்பாக பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, அதன் கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.