மதுரை:

தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மதுரை மாணவி சாதனா,  அகில இந்திய அளவில் தேசிய மாணவர் படையினருக்கு இடையே நடைபெற்ற  துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சரவணன் மோனா தம்பதியின் மகளான சாதனா. அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி சார்பில் நடைபெற்ற தேசிய மாணவர் படையில் சேர்ந்து பல்வேறு பயிற்சி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

தேசிய மாணவர் படையின் வாயிலாக பல்வேறு பயிற்சிகள் பெற்ற  சாதனா,  துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு ஏற்கனவே  முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார்.

அதன்பின்னர்  தேசிய அளவில் நடை டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் கலந்துகொண்டார்.  தமிழ் நாட்டில் இருந்து 15 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டவர்களில் சாதனாவும் ஒருவர்.  இந்த முகாமில்  தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம், உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் அவர்களுக்கு இடையே  துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. அதில் 25 மீட்டர் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து கூறிய சாதனை, பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவிகளுடன் பயிற்சி முகாமில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. அதிலும் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் பெற்றது அத விட பெருமையாக உள்ளது என்றார்.

தனது வெற்றிக்கு எனது பெற்றோரும் பள்ளி  ஆசிரியர்களும், பயிற்சியாளரும் உறுதுணையாக இருந்தனர் என்றார். தனது விருப்பம் ஐஏஎஸ் என்று கூறிய சாதனை,  நான் ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் தேர்வில் கண்டிப்பாக வெற்றி பெற்று இந்திய மக்களுக்கு சேவை செய்யப் போவதாகவும் கூறினார்.

-பொதிகை குமார்