சென்னையில் அரசு தலைமை மருத்துவர் கொரோனாவுக்கு பலி: சிகிச்சை பலனின்றி மரணம்

சென்னை: சென்னையில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் அதிகளளவு கொரோனா பாதிப்புகள் உள்ளன. கோயம்பேடு சந்தை, ஊரடங்கு தளர்வுகளே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த பணிகளில் களம் இறங்கியுள்ள மருத்துவக் குழுவையும் கொரோனா தாக்கி வருகிறது.

குறிப்பாக மருத்துவர்களும், காவலர்களும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில், கொரோனா தொற்றால் தலைமை மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை மருத்துவர் சுகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுகுமாருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அதன் பலனின்றி உயிரிழந்துள்ளார்.