மோடி தலைமையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா: மத்தியஅமைச்சர் ஜே.பி.நட்டா தகவல்

மதுரை:

துரையில் அமைய உளள  எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டது மோடி தலைமையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று  மத்தியஅமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சென்னை வந்தார். அவரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள், தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நட்டா, மதுரையில் விரைவில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டது. விரைவில் அடிக்கல் நாட்டும் பணி நடைபெறும். இந்த   அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார் என்று தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வற்புறுத்தலை தொடர்ந்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. அதைத்தொடர்ந்து மதுரையில்,எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பபடும் என அறிவிக்கப்பட்டு, மத்திய மாநில அமைச்சர்கள் மதுரைக்கு சென்று மருத்துவமனை அமைய உள்ள பகுதிகளை பார்வையிட்டனர்.

இதற்கிடையில், மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக  எந்தவொரு நிதியும் ஒதுக்கப்பட வில்லை என்று ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தககவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாராக இருப்ப தாக தமிழக சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் டில்லி சென்ற தமிழக முதல்வர் பிரதமர் மோடியிடம், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க உடடினயாக நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தினார்.

இந்த நிலையில், மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்படும் என்று மத்திய அமைச்சர் நட்டா தெரிவித்து உள்ளார்.