உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திக்கு இல்லை நிதி..! அமைச்சர் மாபா பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி சொல்லி தரப்படாது என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறி இருக்கிறார்.

சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழியை பயிற்றுவிக்க 6 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தார். அதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இந் நிலையில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்றுக் கொடுக்கப்படாது என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறி இருக்கிறார்.

அவர் மேலும் கூறி இருப்பதாவது: திமுக அரசியல் செய்ய வாய்ப்பு தரக்கூடாது என்ற அடிப்படையில் இந்த முடிவு கைவிடப்பட்டது. இந்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி, தெலுங்குக்கு தரப்படும். மற்ற மொழிகளுக்கும் நிதி தர வேண்டும் என்பது விதி. அதற்காக இந்தியை தேர்வு செய்தோம் என்றார்.