Random image

டிஎன்பிஎஸ்சி முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்ட மேஜிக் பேனா தயாரித்தவர் கைது!

சென்னை:

மிழகத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ள டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக, அழியும் வகையில் மேஜிக் பேனா தயாரித்த நபர் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்விலேயே முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்த நிலையில்,   கடந்த 2016-ம் ஆண்டு நடந்த கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் பலர் மோசடியாக பணியில் சேர்ந்துள்ளது தெரிய வந்தது.

இந்த முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்ட தரகர் ஜெயக்குமார் உள்பட 49 பபேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், குரூப்-4 தேர்வில்  தேர்வர்கள் உபயோகப்படுத்தி பேனா விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அழியும் வகையிலான இங்க் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த பேனாக்கள் கொண்டு தேர்தல் தேர்வு எழுதியதாகவும், அது சிறிது நேரத்தில் மறைந்துவிட்ட நிலையில்,. விடைத்தாள்களை திருத்தி முறைகேடுகள் நடைபெற்றதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக  சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த அசோக் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்தான், தானாக அழியும் மை உடைய மேஜிக் பேனாவை தயாரித்து தரகர் ஜெயக்குமாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்காக அசோக்,  பல லட்ச ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலிஸ் அலுவலகத்தில் வைத்து அசோக்கிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You may have missed