மதுரை:
சாத்தான்குளம் காவல்நிலைய அனைத்து ஆவணங்களையும் உடனே கைப்பற்ற மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்ட உயர்நீதி மன்றம் மதுரை,  வழக்கை சிபிஐ-க்கு மாற்றும் தமிழகஅரசின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றும், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஒத்துழைக்காத காவல்துறைக் கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சாத்தான்குளம் தந்தை மகன்களான ஜெயராஜ்,பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று அகில இந்திய தலைவர் கள் உள்பட அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.
மக்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பால்,  என்ன செய்வது என்று தெரியாத முதல்வர், வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக நேற்று அறிவித்தார்.
இந்தநிலையில் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும்  தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ வசம்  ஒப்படைப்பதில் நீதிமன்றம் தலையிடாது. அரசு கொள்ளை முடிவு எடுத்த பின் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு முறையிடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்ட நீதிபதிகள், வருவாய் அதிகாரியை காவல் நிலையத்துக்கு பொறுப்பாக நியமிக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் உடனே, கைப்பற்றுமாறு ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டனர். காவல்நிலையத்தில் இருக்கும் தடயம், ஆதாரத்தை சேகரிப்பதில் கோவில்பட்டி ஜே.எம்.க்கு உதவ நிபுணர்களின் குழுவை அனுப்ப வேண்டும்  என்று  தடய அறிவியல் கூடுதல் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

மேலும், விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் நியமித்த மாஜிஸ்திரேட்டுக்கு ஒத்துழைப்பு தர மறுத்த போலீஸ் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஒத்துழைக்க போலீஸ் மறுப்பதா என எச்சரிக்கை விடுத்தனர்.

முன்னதாக விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி வழங்கிய அறிக்கையில்,காவல்துறையினர் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கோபடைந்த நீதிபதிகள்,  இது ஒரு மோசமான முன்னுதாரம் என்று கடுமையாக சாடியதுடன், மாவட்டஆட்சித்தலைவர், உடனடியாக சாத்தான்குளம் காவல்நிலையத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும், உடனே வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தர வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டது.

மேலும்,  காவலில் வைக்கப்பட்ட கைதிகள்  கொலைகள் குறித்து மக்கள் மீது பெரும் கோபம் இருந்தபோதிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை  தூத்துக்குடி மாவட்ட எஸ்பியை இடமாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.