ஸ்ரீநகர்:

 ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே இன்று காலை  3.9 ரிக்டர் அளவுகோலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று காலை  8:16 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரைத் தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி குருகிராமிலிருந்து மேற்கு-வடமேற்கே 13 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஸ்ரீநகரிலிருந்து வடகிழக்கில் 15 கிலோமீட்டர் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் இருப்பதை நிலநடுக்கவியல் தேசிய மையம் உறுதிப்படுத்தியது.

ஏற்கனவே ஜூன் 8ந்தேதி 2.1 என்ற ரிக்டர் அளவுகோலில் லேசான பூகம்பம் குருகிராமின் அரியானாவை தாக்கியது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி குருகிராமிலிருந்து மேற்கு-வடமேற்கே 13 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இந்த நில அதிர்வு டெல்லியிலும் உணரப்பட்டது.

அதுபோல ஜூன் 7ந்தேதி  காலை 11:55 மணிக்கு டெல்லியை  1.3 ரிக்டர் அளவுகோலில் அளவைக் கொண்ட மிக லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அ ரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தின் தென்கிழக்கில் தெற்கே 23 கி.மீ தொலைவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக  எதிர்காலத்தில் ஒரு சக்திவாய்ந்த பூகம்பம் இந்தியாவின் தேசிய தலைநகரை தாக்கும் வாய்ப்பு இருப்பதாக புவியியலாளர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.