மியான்மர் – இந்திய எல்லையில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு

டெல்லி:

மியான்மர் – இந்திய எல்லையில் இன்று அதிகாலை  நிலநடுக்கம் ஏற்பட்டது. இது  ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது.

மியான்மலில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள புர்மா பகுதியில் இன்று அதிகாலை 6.42 மணி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தால், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகளுக்கு வந்தனர்.

இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கர் மியான்ம மட்டுமின்றி இந்தியா, பங்களாதேஷிலும் உணரப்பட்டது. இதுகுறித்து சேத விவரம் ஏதும் வெளியாக வில்லை.

கார்ட்டூன் கேலரி