ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜம்மு, காஷ்மீரில் இன்று மாலை 6.56 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் 4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் பொருளிழப்புகள் அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்ற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. வட இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில வாரங்களாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

குஜராத்தின் பரூச் நகரில் நேற்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 4.2 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.