ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்….! பொதுமக்கள் பீதி

ப்கானிஸ்தானில்  இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில், இந்துகுஷ் மலைத்தொடரை ஒட்டிய பகுதிகளில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது  ரிக்டரில் 5.5 ஆக பதிவானது.  ரிக்டர் அளவில் 5.5ஆக பதிவு.

அதிகாலை 4.20 மணிக்குஏற்பட்ட  மிதமான இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் இருந்த பொதுமக்கள் பீதி அடைந்து வீதிக்கு வந்தனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சேதம் ஏதும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நில நடுக்கத்தின் தாக்கல் பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Afghanistan, Magnitude 5.5 earthquake
-=-