பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்

மனிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் போகோல் கடல் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது..

பிலிப்பைன்ஸ் நாட்டின் போகோல் கடல் பகுதியில் இன்று காலையில் சுமார் 9 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  அங்குள்ள ஒட்டி செபு நகரத்தில் இந்த நிலநடுக்கம் நன்கு உணரப்பட்டது

கடலின் சுமார் 540 கிலோமீட்டரில் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகள் வரை பதிவானது என்று சீனாவின் நிலநடுக்க எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால்  கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன..