அண்டார்டிகாவில் 7.1 ரிக்டர் அளவில் பயங்கர நில நடுக்கம்

ண்டார்டிகாவில் 7.1 ரிக்டர் அளவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக மக்கள் அலறிடியத்துக்கொண்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

அன்டார்ட்டிகா நாட்டில்  தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் வடக்கே தெற்கு சாண்ட்விச் தீவுகளுக்கு அருகில் 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நடுக்கம் காரணமாக வீடுகள் கட்டிங்கள் அதிர்ந்தன. நிடுக்கம் காரணமாக  ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

ஆனால், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று  பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துஉள்ளது.

கடந்த வாரம் ஆஸ்திரேலியா அருகே பசிபிக்கடலில் பப்புவா நியூகினியா என்ற தீவில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கம் காரணமாக அண்டார்டிகா உள்பட பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று அண்டார்டிகாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.