ஜகார்த்தா: 

ந்தோனேசியாவில் இனறு காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில்  7.3 ஆக பதிவானது. இதன் காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.  ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடவில்லை.

கிழக்கு இந்தோனேஷியாவின் பண்டா கடற்கரை பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் பப்புவா மாகாணம், அபேபுரா நகருக்கு மேற்கே 240 கி.மீ. தொலைவில், உள்ளூர் நேரப்படி காலை 10.05 மணிக்கு 21 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேஷியா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகுகளாகப் பதிவானதாக அந்த மையம் தெரிவித்தது.