சாம்பியன் பட்டம் வென்றார் மாக்னஸ் கார்ல்சன்!

மும்பை: நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், ‘டூர் கிராண்ட்’ செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

ஆன்லைன் முறையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், மாக்னஸ் கார்ல்சன் மற்றும் அமெரிக்காவின் ஹகாரு நகமுரா மோதினர்.

இப்போட்டியின் 6 சுற்றுகள் முடிவில் இருவரும் 3-3 என்ற சமநிலை ஏற்பட்டது. ஏழாவது சுற்று முடிவிலும் இவருக்கும் சமநிலையே கிடைத்தபோதும், மொத்த புள்ளிகள் அடிப்படையில், சாம்பியன் பட்டம் கார்ல்சனிடம் சென்றது.