தடுமாறிய மாஃ பா பாண்டியராஜன்!

முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏவுமான  மாஃபா பாண்டியராஜன், சிறிது நேரத்துக்கு முன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பல விசயங்கள் குறித்து பேசியவர், இடையே, “எங்கெங்கு காணினும் சக்தியடா” பாடலடியைச் சொல்லிப் பாடியவர் பாரதியார் என்று  குறிப்பிட்டார்.

வழக்கமான அ.தி.மு.க. பிரமுகர்கள் போல் அல்லாமல், நல்ல தமிழ்ப்பாடல்களை உதாரணம் காட்டுவது பாராட்ட வேண்டிய செயல்தான்.

ஆனால்,. பாடலைப் பாடியவரை சரியாகச் சொல்ல வேண்டும் அல்லவா?

மேற்கண்ட பாடலைப் பாடியவர், பாரதிதாசன்!

மெத்தப்படித்த மாஃபா, தடுமாறலாமா?