அழகிய பெண் குழந்தையை பெற்ற கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்…

அவுரங்காபாத்:

மும்பையைச் சேர்ந்த 33 வயதான கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அழகிய பெண் குழந்தையை பெற்றேடுத்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மும்பையின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஜோகேஸ்வரி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ந்த நிறைமாத கர்ப்பிணியான ஜோகேஸ்வரி நேற்று மதியம் 12.40 மணிக்கு அறுவைசிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்ததாக மாவட்ட மருத்துவ அதிகாரி சுந்தர் குல்கர்னி கூறினார்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புக்குள்ளான கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்துள்ளது இது முதல் முறையல்ல. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதே போன்று கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது என்றும் குல்கர்னி கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், புதிதாகப் பிறந்த குழந்தை 3.25 கிலோ எடையுள்ள கொண்டதாக இருந்ததாகவும், அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜோகேஸ்வரியின் 15 வயது மகனுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததை தொடர்தே இவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. ஜோகேஸ்வரி ஏப்ரல் 12 ஆம் தேதி மும்பையில் இருந்து அவுரங்காபாத்துக்குச் சென்று திரும்பியுள்ளார்.

இந்ந்லையில், பிரசவத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு தான் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஜோகேஸ்வரி கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் மருத்துவர்களுக்கு எழுந்தது.

இந்நிலையில், அந்த பெண்மனி
மும்பையைச் சேர்ந்த பெண், அழகிய பெண் குழந்தையை பெற்றேடுத்தாகவும், பிறந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

You may have missed