திருவண்ணாமலையில் இன்று மாலை மகாதீபம்! பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை,

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி,  திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை மலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

பஞ்ச பூதத்தலங்களில் அக்னிஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை என்பது ஐதிகம். இத்தலத்தில் சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே, கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் காலங்காலமாக வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் கார்த்தி தீப திருவிழாவை முன்னிட்டுதிருவண்ணாமலை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மகாதீபத்தையொட்டி  இன்று அதிகாலை 2மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர் சமேத வள்ளி தெய்வாணை, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் அதிகாலை காலை 4மணி அளவில் அண்ணாமலையார் மூல கருவறையில் கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

நாளை  மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறு

கிறது.

தீப விழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கனா பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி  தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விழாவையொட்டி 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அடி, முடி காண முடியாதவன் சிவபெருமான் என்பதை விஷ்ணுவும் பிரம்மாவும் உணர்வதை முன்னிட்டு, அடிமுடியற்ற ஜோதி  சொரூபனாக அவர்களுக்கு சிவபெருமான் காட்சி தந்த திருத்தலம் திருவண்ணாமலை.  அதைக்கொண்டாடும் வகையிலேயே மகா கார்த்திகை தீப திருநாளன்று  திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Bharani deepam, Maha deepam, Thiruvannamalai, Thiruvannamalai annamalaiyar temple, thiruvannamalai  maha deepam, திருவண்ணாமலை, மகாதீபம்!
-=-