மஹாசிவராத்திரி கொண்டாட்டம்

சத்குருவுடன் ஞானம் தியானம் ஆனந்தம்

கோலாகலமான இசை நடன நிகழ்ச்சிகள்

சோனு நிகம், தலெர் மெஹந்தி, மோஹித் சௌஹான், ஷான் ரோல்டன் நண்பர்களின் நாட்டுப்புறப் பாடல்கள், சவுன்ட்ஸ் ஆப் ஈஷா. இன்னும் பல கலைநிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன

ஆதியோகியின் அருளில் திளைத்திட வாருங்கள்.

இவ்வாண்டு ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும். சத்குரு அவர்களின் முன்னிலையில் நடக்கவிருக்கும் இக்கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

அனைவருக்கும் ஆதியோகியின் ருத்ராட்சம் வரப்பிரசாதமாக கிடைக்கும்!

கடந்த (2017) மஹாசிவராத்திரியில் 112 அடி ஆதியோகி திருமுக பிரதிஷ்டையின்போது, தன்னார்வத் தொண்டர்களால் கோர்க்கப்பட்டு ‘லட்சத்து எட்டு’ ருத்ராட்சம் கொண்ட மாலை ஆதியோகிக்கு அர்ப்பணையாக அணிவிக்கப்பட்டது. இந்த ஓராண்டு காலம் அந்த மாலை ஆதியோகியின் உடலை அலங்கரித்து வருகிறது. அந்த மாலையிலுள்ள ருத்ராட்ச மணிகள் அனைத்தும் இவ்வருட மஹாசிவராத்திரி விழாவிற்கு நேரடியாக வருகைதரும் அனைவருக்கும் ஆதியோகி பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. தமிழ் மக்கள் அனைவரும் இதனைப் பெறவேண்டும் என்பது சத்குருவின் பெரும் விருப்பமாக உள்ளது. ஆதியோகி ருத்ராட்ச பிரசாதத்தைப் பெற முன்பதிவோ அல்லது நன்கொடையோ தேவையில்லை.

ஈஷா மஹாசிவராத்ரி விழாவில் பங்கேற்கவும் விபரங்கள் தெரிந்துகொள்ளவும்:

தொலைபேசி எண்: 83000 83111

மின்னஞ்சல்: info@mahashivarathri.org

இணையதளம்: tamil.sadhguru.org/MSR