வறுமையில் வாடும் மஹாபாரத இந்திரன் நடிகர் சதீஷ் கவுல்….!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரத தொடரில் இந்திரன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ் கவுல்.

இவர் 300-க்கும் மேற்பட்ட பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக சதீஷ் கவுலுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தனக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்களை வாங்குவதற்கு கூட பணம் இல்லாத சூழலில் அவர் வறுமையில் வாடி வருகிறார்.

இதுகுறித்து சதீஷ் கவுல் “திரைப்படவாய்ப்புகள் சரிவர கிடைக்காததால், 2011-ம் ஆண்டு மும்பையில் இருந்து பஞ்சாபுக்கு வந்து நடிப்புக் கல்லூரியை தொடங்கினேன். ஆனால் அதில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதனால் என் சொத்துகள் அனைத்தையும் இழந்துவிட்டேன். தற்போது மிகவும் வறுமையான சூழலில் வாழ்கிறேன். பஞ்சாப் மற்றும் இந்தி திரையுலகம் எனக்கு உதவி செய்ய வேண்டும். இயக்குநர்கள் எனக்கு வாய்ப்பளித்து உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார் .

கார்ட்டூன் கேலரி