கோலாப்பூர்

காராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நாளை முதல் முழு அடைப்பு அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடெங்கும் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.   இதில் மகாராஷ்டிராவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இங்கு அனைத்து பெரிய நகரங்களிலும் கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.  ஆயினும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது.

கோலாப்பூர் நகரில் மட்டும் இதுவரை 70000க்கும் மேற்பட்டோர் அதிகரித்து அதில் 1833 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதையொட்டி இன்று புறநகர் வளர்ச்சித் துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் கூட்டம் கூடி விவாதித்துள்ளனர்.  அந்தக் கூட்டத்தில் நாளை முதல் 10 நாட்களுக்கு கோலாப்பூர் நகரில் முழு அடைப்பு அமலுக்கு கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த 10 நாட்களில் பால் மற்றும் மருந்து விநியோகம் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட உள்ளன. இன்று நள்ளிரவு முதல் கோலாப்பூர் நகரில் இந்த ஊரடங்கு அமலாகிறது.  மேலும் கோலாப்பூர் மாவட்டம்  முழுவதும் நாளை நள்ளிரவு முதல் 8 நாட்களுக்கு ஊரடங்கு அமலாக்கப்பட உள்ளது.