மும்பை

ன்று கொரோனா தடுப்பூசி முகாம் முதல் நாளில் மகாராஷ்டிராவில் 14 பேருக்கு எதிர் விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்தியாவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன.  இன்றைய முதல் நாள் முகாமில் மொத்தம் சுமார் 14000 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  இவர்களில் முன்கட்ட சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை அதிகாரி அதார் புனே வாலா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

தற்போது நாடெங்கும் இரு கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அவை சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் மற்றும்பாரத் பயோடெக் தயாரிப்பான கோவாக்சின் ஆகியவை ஆகும்.  இதில் இரண்டாம் மருந்தான கோவாக்சின் இதுவரை அதிக மக்களுக்குப் போடப்பட்டு சோதனை செய்யப்படவில்லை எனவும் இது எவ்வளவு பாதுகாப்பானது எனத் தெரியவில்லை. என கூறப்படுகிறது.

இன்றைய முதல் நாளில் மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிகள் போட 285 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன    முதல் கட்டத்துக்குத் தேவையான மருந்தில் இதுவரை 60% இங்கு அனுப்பப்பட்டுள்ளது.  இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டோரில் 14 பேருக்கு எதிர் விளைவுகள் காணப்பட்டுள்ளன.   ஆனால் அபாயம் ஏதுவும் ஏற்படவில்லை என மநில அரசு அறிவித்துள்ளது.  இவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.