Random image

மகாராஷ்டிரா: குழந்தைகளை பராமரிக்க பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய 180 நாட்கள் விடுப்பு அறிவிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசாங்க வேலைகள் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளை பராமரிக்க 180 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை எடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசாங்க வேலைகளில் உள்ள 4 லட்சம் பெண்களுக்கு நற்செய்தி என்றே கூறலாம்.
Chile
மாநிலத்தின் அமைச்சரவை கூட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பிற்காக அளிக்கப்படும் விடுப்பிற்கான முன்மொழிவு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சரான சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார். இந்த முடிவு வரவேற்கதக்கது என்று மாநிலத்தின் ஆலோசகரான ஜி.டி. குல்தி கூறியுள்ளார். மத்திய அரசு குழந்தைகள் பராமரிப்பிற்காக 2ஆண்டுகள் விடுப்பு அளிப்பதாகவும், மகாரஷ்டிரா மாநிலத்தில் இந்த விடுப்பு அறிவிப்பு கணவனை இழந்த பெண்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இரண்டு குழந்தைகளை கொண்ட பெண்கள் இருமுறை மகப்பேறு விடுப்புகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும், குழந்தைகளை பராமரிப்பதற்கு 180 நாட்களுக்கான விடுப்புகளை இடைவெளி விட்டு எடுத்து கொள்ளலாம் என்றும் மாநிலத்தின் நிதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குழந்தை பராமரிப்பிற்கான விடுப்புகளை 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது அவர்களுக்கு உதவும் வகையில் தாய் எடுத்து கொள்ளலாம் என்று மாநில அரசு கூறியுள்ளது. மேலும், இந்த விடுப்புகளை குழந்தைகள் 18 வயதை அடைவதற்குள் 3 முறை எடுத்துக்கொள்ள பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் 18 வயதை அடைந்தவுடன் அவர்கள் வாக்களிக்கும் உரிமை அடைவதால் பெற்றோரின் உதவி தேவைப்படாது என்று நிதித்துறை அமைச்சரான முங்கந்திவார் கூறியுள்ளார்.