மகாராஷ்டிரா: புட் பாய்சனுக்கு 3 குழந்தைகள் பரிதாப பலி

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் அருகே காலாப்பூரில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு இன்று உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் 3 பேரும் இன்று உயிரிழந்தனர்.

மேலும் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உணவில் ஏற்பட்ட விஷத்தன்மை தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

You may have missed