கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெறும் தேசியளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 27 பதக்கங்கள் பெற்று தற்போதைய நிலையில் மராட்டிய மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது.

இந்திய அளவில் இளம் விளையாட்டு வீரர்களின் திறன்களைக் கண்டறியும் நோக்கத்தில் நடத்தப்படும் இந்த விளையாட்டுத் திருவிழாவில், மராட்டியத்தின் ஆஸ்மி, சிறுமிகள் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 3 தங்கங்களை வென்றார்.

இப்போட்டித் திருவிழாவின் முதல் தங்கப்பத்க்கத்தை வென்ற திரிபுரா மாநிலத்தின் பிரியங்கா தாஸ், இதுவரை ஜிமினாஸ்டிக் பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். தற்போதைய நிலையில், அதிக தங்கம் வென்றவர்கள் பட்டியலில் இவரே முதலிடம் பெற்றுள்ளார்.

மராட்டிய மாநிலம் வென்றுள்ள 27 பதக்கங்களில் 7 தங்கம், 8 வெள்ளி மற்றும் 12 வெண்கலங்கள் அடக்கம். அடுத்ததாக, உத்திரப்பிரதேசம் 12 பதக்கங்கள், டில்லி 11 பதக்கங்கள் மற்றும் குஜராத் 10 பதக்கங்களைப் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.