கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: ஐபிஎல் டிக்கெட் விற்பனைக்கு மகாராஷ்டிரா அரசு தடை

மும்பை:  கொரோனா வைரஸ் பரவலால், ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனைக்கு மகாராஷ்டிரா அரசு தடை விதித்துள்ளது.

கிரிக்கெட் பிரியர்களின் முக்கிய தொடரான ஐபிஎல் தொடருக்கான டிக்கெட் விற்பனையை சிவசேனா கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த ஐபிஎல் வரும் 29ம் தேதி தொடங்குகிறது.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இந்த போட்டியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இது ஒருபக்கம் இருக்க, நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் 5, உத்தரப்பிரதேசத்தில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறிப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட 60 பேரில் 16 இத்தாலியர்கள் அடக்கம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.