பேருந்து விபத்தில் 33 மகாராஷ்டிரா பல்கலை ஊழியர்கள் மரணம்

ம்பனேலி, மகாராஷ்டிரா

காராஷ்டிராவில் பேருந்து விபத்தில் 33 பல்கலைக்கழக் ஊழியர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இருந்து சுமார் 180 கிமீ தொலைவில் உள்ளது அம்பனேலி என்னும் ஊர்.  ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஊர் வழியாக புகழ்பெற்ற மகாபலேஸ்வரர் மலைத் தொடருக்கு பலரும் சுற்றுலா செல்வது வழக்கம்.   கொங்கண் பகுதியிலுள்ள வேளாண் பல்கலைக் கழக ஊழியர்கள் 34 பேர் இணந்து ஒரு பேருந்தில் இந்த வழியாக சுற்றுலா சென்றுள்ளனர்.

அந்த பேருந்து நேற்று சுமார் 12.30 மணிக்கு இந்த பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.  அதனால் பேருந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த தடுப்புச் சுவரில் வேகமாக மோதியது.  அவ்வாறு மோதியதில் தடுப்புச் சுவர் இடிந்து அந்த பேருந்து அருகில் இருந்த 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஒருவரை தவிர மற்ற 33 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.   தகவல் அறிந்து அந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.   உடன் வந்த மருத்துவக் குழுவினரும் முதலுதவி செய்ய ஆரம்பித்தனர்.  ஆயினும் அவர்களால் ஒரே ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது.