யில் நிலையங்களில் பிளாட்பார கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனே ரயில் நிலையத்தில் 50 ரூபாய் பிளாட்பார கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் பயணிகள், இந்த பகல் கொள்ளை குறித்து சமூக வலைத் தளங்களில், தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.

50 ரூபாய் பிளாட்பார டிக்கெட்டை போட்டோ பிடித்து வலைத்தளங்களில் வைரலாக்கினர். இதனால் சுதாரித்துக்கொண்ட மத்திய ரயில்வே’’ கொரோன பரவலை கட்டுப்படுவதற்காக, மார்ச் 18 ஆம் தேதி முதல் பிளாட்பார டிக்கெட்டுகளின் விலையை அந்தந்த ரயில் நிலையங்கள். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உயர்த்திகொள்ளலாம் என உத்தரவிட்டது உண்மை தான். அது ஒரு தற்காலிக ஏற்பாடு தான்.’’ என்று விளக்கம் அளித்துள்ளது.

‘’ கொரோனவை காரணம் காட்டி, பிளாட்பார டிக்கெட் விலை உயர்வு அறிவிப்பு மார்ச் மாதம் பிறக்கப்பட்டபோது, 20 நாட்கள் மட்டுமே விலை உயர்வு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டது. ஆனால் இன்னமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என பயணிகள் குமுறுகின்றனர்.

-பா.பாரதி.