தேவேந்திர பட்னாவிஸ் ஹெலிகாப்டரில் ‘ஓவர் லோடு’….அவசர தரையிறக்கம்

மும்பை:

மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் செய்த ஹெலிகாப்டர் அதிக பாரம் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு நீர்வள அமைச்சர் கிரிஷ் மகாஜன் மற்றும் சிலருடன் முதல்வர் நாசிக்கில் இருந்து அவுரங்காபாத்துக்கு பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. திறந்தவெளி மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் பறக்க தொடங்கியது. 50 அடி உயரத்திற்கு மேல் ஹெலிகாப்டரால் பறக்க முடியவில்¬. இதனால் சில மீட்டர் தூரத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது.

அதிக பாரம் காரணமாக ஹெலிகாப்டரால் தொடர்ந்து பறக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வரின் சமையல்காரர் மற்றும் அவரது உடமைகள் கீழே இறக்கப்பட்டு பின்னர் பற க்கப்பட்டது. இதையடுத்து 25 நிமிடத்தில் முதல் ஹெலிகாப்டர் மூலம் அவுரங்காபாத் சென்றார். உடமைகளுடன் சமையலர் சாலை வழியாக 3 மணி நேர பயணம் மேற்கொண்டு அவுரங்காபாத்தை சென்றடைந்தார்.

கடந்த 2 ஆண்டுகளில் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் செய்த ஹெலிகாப்டர்கள் இது போன்று 3 பிர ச்னைகளில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவை பாதுகாப்பு மற்றும் விமான போக்குவரத்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை அமைந்துள்ளது.