முடிவுக்கு வந்தது ம.பி முதல்வரின் உண்ணாவிரதம்

போபால்

த்திய பிரதேசத்தில் அமைதி வேண்டி  தாம் ஆரம்பித்திருந்த உண்ணாவிரதத்தை ம.பி முதல்வர் சிவராஜ் சவுகான் முடித்துக் கொண்டார்.

மத்தியப் பிரதேசத்தில் ஜூன் 1 முதல் விவசாயிகள் போராட்டம் நடை பெறுகிறது

போராட்டத்தின்போது விவசாயிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது

எனவே மாநிலத்தில் அமைதி நிலவ சிவராஜ் சிங் சவுகான் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.

இன்றும் நேற்றும் எந்த ஒரு வன்முறை சம்பவமும் நிகழவில்லை,

எனவே அமைதி திரும்பியதென்று கூறி, முன்னாள் முதல்வர் கைலாஷ் ஜோஷி கொடுத்த இளநீரை அருந்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

விவசாயிகள் மரணத்துக்கு காரணமானவர்க்ளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என முதல்வர் கூறினார்.

அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் போது விவசாயிகளின் பிரதிநிதிகள் பலரையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

மாண்டசூரில் இறந்த விவசாயிகளின் உறவினர்களும் முதல்வரின் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு வேண்டிக்கொண்டதாக பா ஜ க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஜுன்ர் 8ஆம் தேதியன்று மாண்டசூரினுள் விவசாயிகளை சந்திக்க தடையை மீறிச் செல்ல முயன்ற காங் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டது தெரிந்ததே